2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற மற்றும் இடம்மாறிச் சென்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளுடனான  உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடலும் இன்று ( 26 ) அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.


இதில் பிரதேச செயலாளர், திவிநெகும மாவட்ட பணிப்பாளர்  உட்பட கல்முனை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற உத்தியோகத்தர்களும் பொது முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி இடம்மாறிச் சென்றவர்களும்  கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் திவிநெகும மாவட்ட பணிப்பாளர் அனுருத்த பியதாஸ, கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி, திவிநெகும பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X