2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஆதரவை விளக்கிக்கொள்ள ஐ.ம.சு.மு. தீர்மானம்

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் விலக்கிக்கௌ;ள தீர்மானித்துள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகண சபையின் நிலை தொடர்பில் அம்பாறையில் வெள்ளிக்கிழமை (27)இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கயில்,

'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாங்கள், ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே, மு.கா.வைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வருவதற்கு சட்டபூர்வமான ஆதரவை வழங்கி இருந்தோம்.

கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சரை பெற்றதன் பின்னர் மு.கா. உடன்பாட்டினை மீறி செயற்பட்டு வருகின்றது. இதனால் தங்களால் வழங்கப்பட்ட சட்டரீதியான ஆதரவை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்hந்தத்தினை மு.கா. ஏற்படுத்தியுள்ளது.

மு.கா.வுக்கு முதலமைச்சுப் பதவிக்கான அங்கிகாரம் ஒன்றினையே வழங்கினோம், தவிர ஏனைய அமைச்சுப்பதவிகள் பங்கீடு மற்றும் தேசிய அரசாங்கம் பற்றி எதுவும் எம்மிடம் கலந்தாலோசிக்கவில்லை.

மு.கா.வின் முன்னுக்குப்பின் முறனான செயற்பாட்டின் காரணமாக இன்று கிழக்கு மாகாண சபையின் நிலை குறித்து மக்கள் குழம்பியுள்ளனர். மட்டுமல்லாது சபையின் ஸ்திரமான நிலையும் குழம்பியுள்ளது.

மு.கா. நல்லெண்ணெத்தை வெளிக்காட்டுவதாகவும் நல்லாட்சி ஏற்படுத்துவதாகவும் தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப் போவதாகவும் கூறி ஆதரவு வழங்கிய எம்மை அவமதிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மக்களுக்கு தெளிவான கருத்தையும் சிறந்த வழிகாட்டுதலையும், நல்ல சிந்தனைகளையும் அரசியல் தலைமைகள் கொண்டு செல்ல வேண்டும். மாறாக சந்தர்ப்பவாத அரசியலுக்கும் சுயநலவிருப்பு, வெறுப்புக்களுக்கும் இடமளிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X