2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியலயத்தில் இவ்வருடத்துக்கான மாணவத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சின்னம் சூட்டல் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிபர் மற்றும் ஆசிரியர்களால், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு சின்னங்களும் சூட்டப்பட்டன.

அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரிய ஆலோசகர் எம். றபீக், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X