2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கலாசார மத்திய நிலையம் திறப்பு

Kogilavani   / 2015 மார்ச் 01 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹமத்துல்லா


திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையம் திருக்கோவில் பிரசே செயலாளர் எஸ்.ஜெகராஜனின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (1) திறந்து வைக்கப்பட்டது.


அம்பாறை திருக்கோவில் பிரதேச மக்களின் கலாசார நிகழ்வுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க,  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பீ.தயாகமகே, அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன், திருக்கோவில் பிரசே செயலாளர் எஸ்.ஜெகராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் உட்பட கலைஞர்கள், பொது மக்களும் கலந்துகொண்டனர்.


இதன்போது, கலாசார மத்திய நிலையத்துக்கான  மாணவர்கள் பதிவு செய்யப்பட்டதுடன் கலாசார மத்திய நிலையத்துக்கான இசைக்கருவிகளும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X