Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மார்ச் 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடியவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள். இவர்களில் தமிழ் சகோதரர்களின் பங்களிப்பு முக்கியமானது என கலாசார இராஜாங்க அமைச்சர் நந்தி மித்திர ஏக்கநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கைத் தாய்க்கு மூன்று பிள்ளைகள். இவர்களில் முதல் பிள்ளையாக சிங்களவர்களும் இரண்டாவது பிள்ளையாக தமிழர்களும் மூன்றாவது பிள்ளையாக முஸ்லிம்களும் அன்பாக வாழ்கின்றனர்.
தாயானவள் ஒரு பிள்ளைக்கு ஒரு மாதிரியும் மற்றைய பிள்ளைக்கு வேறு மாதிரியும் பாசம் காட்டுவதில்லை.
இந்நாட்டின் சுதந்திரத்துக்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டுள்ளார்கள். அவர்கள் பெற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஆவார். அவரின் காலத்தில் தான் அனைவரும் சமத்துவமாக நடத்தப்பட்டனர். அக்காலம் ஒரு பொன்னான காலமாகும்.
பின்னர் நாட்டில் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்று யுத்தம் உருவானது. இந்த யுத்தத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு இன முரண்பாடுகளை மறந்து இலங்கையில் அனைத்துப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
அவ்வகையில் தற்போது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறிப்பிட்டதொரு இனத்துக்கு மட்டுமன்றி அனைத்து பிரதேசங்களுக்கும் வேறுபாடு இன்றி முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago