2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொத்துவில் கோட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

Princiya Dixci   / 2015 மார்ச் 02 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்

பொத்துவில் கோட்டத்தில் இயங்கி வரும் 20 பாடசாலைகளில் மாணவர்களின் வரவுநிலை இன்று மந்த கதியில் காணப்படுகிறது. பொத்துவில் கோட்டத்தில் தொடர்கின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி மாணவர்கள் பாடசாலை பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது.

கடந்த மாதம் மாத்திரம் 36 ஆசிரியர்கள் எந்தவித பதிலீடுகளும் இன்றி பொத்துவில் கோட்டத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். அவர்களுக்கான பதிலீடுகள் இதுவரையும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பொத்துவில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.  

இன்று திங்கட்கிழமை (02) பொத்துவில் கோட்டத்தின் பெரும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவுநிலை மிகக் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக, அல் இர்பான் மகளிர் கல்லூரியில் மொத்தமாக 1034 மாணவிகளில் 110 மாணவிகள் மாத்திரமே இன்று வருகை தந்துள்ளனர்.

கடமையிலுள்ள ஆசிரியர்களின் வரவு திருப்திகரமாக இருப்பினும் மாணவர்களின் வரவின்மை காரணமாக கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

பொத்துவில் கோட்டத்தில் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்காவிடின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்தும் பாடசாலை பகிஸ்கரிப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து, உரிய அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X