2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆய்வு மாநாடு

Kogilavani   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்


தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீடம் நடத்தும் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு புதன்கிழமை (04) பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இந்த ஆய்வு மாநாடு மொழிகள், மதங்கள், கலாசாரம், மற்றும் சமூகத்தினூடாக தேசிய அபிவிருத்திக்கான நம்பிக்கை எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.


இவ்வாய்வு மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு  ஆய்வாளர்களால் சுமார் 42 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இந்தியா மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அங்குரார்ப்பண உரையை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் பிரதான உரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸூம், பிரதான பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீனும் நன்றியுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெமிலும் நிகழ்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X