2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஒன்றுகூடல் நிகழ்வு

Kogilavani   / 2015 மார்ச் 03 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல் செவ்வாய்க்கிழமை (02) சம்மாந்துறை இல் இக்றாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் செயலாளர் எஸ்.எல்.மன்சூர், சம்மாந்துறை வலயத் தலைவர் எம்.எல்.ஜூனைட், அக்கறைப்பற்று வலயத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.நபீஸ், கல்முனை வலய செயலாளர் மௌலவி எம்.ஐ.எம்.ஹிதாயதுல்லா, அக்கறைப்பற்று வலய செயலாளர் எஸ்.றபீயுதீன் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அண்மைக்காலமாக அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடத்துவதில் காணப்பட்டு வருகின்ற குறைபாடுகள், சிக்கல்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  

இதன்போது உரையாற்றிய அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன்,

'அம்பாறை மாவட்டத்தில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகள் பெரும்பாலான பிரதேசங்களில் அரச பாடசாலைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில வருடங்களாக அரச பாடசாலைகளில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறு வகுப்புகளை நடத்துவதற்கு சில அதிபர்கள் அனுமதி மறுத்ததனால் இந்த வகுப்புகள் தனிப்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இதனால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளினாலும் மாவட்ட நிர்வாகிகளினாலும்  பாடசாலைகளை கண்கானிக்க முடியாத நிலை தோன்றியது.

இதனை கருத்தில் கொண்டு அரச பாடசாலைகளில் இந்த பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாமிடம் கலந்துரையாடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட மாகாண கல்விப் பணிப்பாளர்; சகல பாடசாலைகளுக்கும் அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சுற்று நிருபம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு சகல அஹதிய்யா பாடசாலைகளும் அரச பாடசாலைகளில் நடத்துமாறும் தமக்கு வழங்கப்பட்ட அமானிதமான பொறுப்பை சரியான முறையில் இறைவனின் திருப்பொருத்தத்துக்கு அமைவாகவும் நடத்தமாறும் கேட்டுக் கொண்டார்.

எதிர்காலத்தில் எமது பாடசாலைகள், சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X