2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பேரின சமூகத்தால் தெற்காசிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன: அனஸ்

Kogilavani   / 2015 மார்ச் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா  


'அரசியல், கலாசார, சமூக பொருளாதார ரீதியாக பேரின சமூகத்தால் பாதிக்கப்படுவது தெற்காசிய நாடுகளே' என பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தெரிவித்தார்.


தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச மாநாடு புதன்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.


இதில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சமயம், மொழி, கலாசாரம் மற்றும் சமூகம் என்பவற்றினுடாக தேசிய அபிவிருத்தியை வலுவூட்டல் எனும் தொனிப் பொருளில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பேரசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,


'தெற்காசியாவில் மதம் மற்றும் அரசியல் ரீதியாக வழமைக்கு மாறாக நிலமைகளை நாம் அவதானிக்கின்றோம். தெற்காசியாவில் அவசியமான ஒற்றுமை பல்வேறு சமூகத்தினருக்கு உயர்வழிக்கின்றன.


தென்கிழக்கு பல்கலைக்கழகம் கல்வில் மட்டுமல்லாது சமூகம் சார் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதை நான் பாராட்டுகின்றேன். காலததுக்கு ஏற்ற இவ்வாறான ஆய்வு மாநாடுகள் மூலம் இவ் பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் முன்னணியில் திகழ்கின்றது. இவ் ஆய்வு அரங்கை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரையும் பாராட்டுகின்றேன்.


இப் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால வளர்ச்சியின் கனதியினால் இவ் ஆய்வு அரங்குக்கு வெளிநாட்டு ஆய்வாளர்களும் பங்குபற்றி இருப்பது எமக்கு பெருமையாக இருக்கின்றது' என்றார்.


இந்நிகழ்வில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸூக்கு பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X