Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 08 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அரசின் 100நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் தீர்த்துவைக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே, நேற்று சனிக்கிழமை(07) தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில், சம்மாந்துறை பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதியமைச்சருக்குமிடையிலான சந்திப்பு பிரதியமைச்சர் அனோமா கமகேயின் அம்பாறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியிலாளர் பிரிவுக்குட்பட்ட சிறிய குளங்களை புனர்நிர்மாணம் செய்தல், வாய்க்கால்களை சுத்தம் செய்தல், விவசாய பாதைகளை அபிவிருத்தி செய்தல், விவசாய பாலங்கள் அமைத்தல், காட்டு யானைகளை கட்டுப்படுத்த மின்சார வேலி அமைத்த மின்சார வேலி அமைத்தல் உட்பட பல பிரச்சினைகளை பற்றிய விடயங்களை பிரதியமைச்சரிடம் விவசாயிகள் முன்வைத்தனர்.
இவைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் மிகமுக்கியமான பிரச்சினைகளை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக தீர்த்து வைக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஏனைய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சம்மாந்துறை விவசாய நலன்புரி சமூக சேவைகள் அமைப்பு, வளத்தாப்பிட்டி கரங்கா விவசாய அமைப்பு, கள்ளியம்பற்றை விவசாய கண்ட அமைப்பு, புளக் 'ஜே' பிரிவு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்கள்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago