2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை பிரதேச மக்களின்; குடிநீர்; பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடல்

Thipaan   / 2015 மார்ச் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் குடிநீர்; பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸுக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை, தமிழ் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்; வழங்கல் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் குடிநீர்; பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டு இதற்கான தீர்;வாக கல்முனைக்குடியிலும், இஸ்லாமாபாத்திலும் தனியான நீர்தாங்கி நிர்மாணிப்பது என தீர்;மானிக்கப்பட்டது.

அத்துடன் இதனை நிர்மாணிப்பதற்கான இடத்தினை இனங்காணும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இதில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஐ.எல்.கைதர் அலி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிரதேச பொறியியலாளர் எஸ்.சதீஸ், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனைக் காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.எம்.முனவ்வர், பொறியியலாளர் ஜே.எம்.ஜௌசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X