2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விளம்பரப்பலகைகள் பொருத்தும் வேலைத்திட்டம்

Gavitha   / 2015 மார்ச் 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் 

அம்பாறை பாலமுனை ஹில்ப் சமூக சேவைகள் அமைப்பு,  பாலமுனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு நற்சிந்தனைகள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் பொருத்தும் வேலைத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைவாக சனிக்கிழமை (07)  பாலமுனை ஹைமா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஹில்ப் சமூக சேவை அமைப்பின் தவைரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.எம்.றிஸ்வான் உட்பட பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஹில்ப் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஹில்ப் சமூக சேவை அமைப்பினால் ஆங்கில பாலர் பாடசாலை உட்பட பல்வேறு சமூக வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X