Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 09 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல்.அப்துல் அஸீஸ், அஷ்ரப் கான்
'ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான அரசு, தனது 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் இரண்டு பெரிய மாற்றங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. அதில் ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவது அடுத்தது தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையை மாற்றுவது என்பதாகும். குறித்த இரண்டு மாற்றங்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான ஒன்றல்ல' என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கல்முனை இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை; ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை காரணமாக குறித்த ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மையினரின் வாக்குகள் செல்வாக்குச் செலுத்துவதால், சிறுபான்மையினரின் தேவைகளை ஜனாதிபதியைக் கொண்டு அடைந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. மாறாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் போது நாடாளுமன்றத்துக்கே எல்லா அதிகாரங்களும் செல்கின்றன.
அதன் காரணத்தால் சிறுபான்மையினரின் தேவைகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே செய்யவேண்டி வரும். நாடாளுமன்றத்தை பயன்படுத்தி தேவைகளை பூர்த்திசெய்ய முற்படும்போது அங்கு சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் அவசியமாகின்றது.
100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படும்போது சிறுபான்மை மக்கள் பாரிய சவாலை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
70 வீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தையும் 30 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் செயற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் சுமார் 8 க்கு அதிகமான உறுப்பினர்களைக்கூட பெறுவது கடினமாக அமையும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுமார் 10 வீதமான மக்கள் இங்கு வாழ்வதால் ஆகக் குறைந்தது 20 உறுப்பினர்களையாவது பெறவேண்டும். ஆனால் மேற்கூறப்பட்ட 70 வீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துமும் 30 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவமும் என்ற நிலை ஏற்படுமாக இருந்தால், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவதை யாராலும் தடுக்க முடியாமல் போவதுடன் குறைந்த உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம்கள் அவர்களது இலக்குகளை அடைவதில் சிக்கல் நிலை ஏற்படலாம்.
தேர்தல் விடயத்தில் சிறுபான்மையினர் விரைந்து செயற்படவேண்டும். 50:50 என்ற முறையில் ஓரளவு திருப்தியடையலாம். சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
கூறப்படும் விகிதாசார தேர்தல்முறை கூட, அது மாவட்ட ரீதியான முறையா? மாகாண முறையிலான முறையா? அல்லது தேசிய ரீதியான முறையா? என சந்தேகம் நிலவுகின்றது.
தேர்தல்முறையை மாற்றுவதால் சிறுபான்மையினர் எதிர்நோக்கப்போகும் பிரச்சினைகளை முஸ்லிம் கட்சிகள், தமிழ் கட்சிகள், மேல் மாகாணசபை உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான கட்சி, மலையக கட்சிகள் எல்லாம் நன்றாக யோசித்து செயற்படவேண்டும்' என அவர் இதன்போது கேட்டுகொண்டார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago