2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மாவட்ட கிளைக்குழுக்களை புனரமைக்கும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கிளைக்குழுக்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் கிராமத்தின் கிளைக்குழு புனரமைப்பு வேலை ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்றது.

இதன்போது கிளைக்குழுவுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றதுடன் கிராம மட்டத்திலான கட்சி புனரமைப்பு வேலைகள், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதேவேளை வாங்காமம் 10ஏ கொளனிக்கான கிளைக்குழு புனரமைப்புக் கூட்டம் ஏ.பி.எம். அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.

வாங்காமம் 10ஆம் கொளனி கிளைக்குழுவின் தலைவர் ஏ.கே. இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, யூ.எல் உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X