2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ரண்விம காணி உறுதி வழங்கும் வைபவம்

Kogilavani   / 2015 மார்ச் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ், எம்.எஸ்.எம். ஹனீபா

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரண்விம காணி உறுதி வழங்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (9) அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காணி அமைச்சர் எம்.எ.டி.குணவர்தன, விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே, இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொணடனர்.

அம்பாறை உகன, லகுகல, பதியத்தலாவ, தெஹியத்த கண்டி, தமன ஆகிய பிரதேச மக்களுக்கு அம்பாறை நகர மண்டபத்திலும் சம்மாந்துறை, கல்முனை, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், நாவதன்வெளி ஆகிய பிரதேச மக்களுக்கு சம்மாந்துறை நகர மண்டபத்திலும்; வைத்து காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைககப்பட்டன.

நாடளாவிய ரீதியில் 25 ஆயிரம் ஆவணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அம்பாறையில் முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 2964 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்;பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X