2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஒலுவில் துறைமுகத்தை மீள இயங்கச்செய்வது தொடர்பில் ஆராய்வு

Thipaan   / 2015 மார்ச் 15 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.எல். அப்துல் அஸீஸ் 

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனை இயங்கச் செய்வது தொடர்பாக ஆராயும் பொருட்டு,  கொரிய நாட்டு தூதுக் குழுவினர், சனிக்கிழமை (14) ஒலுவில் துறைமுகத்துக்கு விஜயம்  செய்தனர்.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமின் அழைப்பின் பேரில் கொரிய நாட்டு துறை சார் நிபுணர்கள் குழுவினர் விஜயம் செய்து துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

துறைமுகத்தில் காணப்படும் கடல் மணல் மேடு அகற்றுவது தொடர்பாகவும் மீன் பதனிடும் தொழிற்சாலை நிர்மணப்பது தொடர்பாகவும் குழுவினர் கலந்துரையாடியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். பழீல் தெரிவித்தார்.

அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட இத் துறைமுகத்தை அரசின் 100 நாட்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.எல்.எம். பழீல் மேலும் தெரிவித்தார்.

இத்துறைசார் கொரிய ஸ்ரீலங்கா கூட்டு நிறுவனமான 'கோசன் சிறிலக்' தனியார் நிறுவனத்தின்  பணிப்பாளர் Dao Jo Lee மற்றும் கொரிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிதியான Kang உள்ளிட்ட குழுவினர், அனில் பீரிசின்  தலைமையில் ஒலுவில் துறைமுகத்துக்கு விஜயம்செய்து செயற்திட்டத்துக்கு ஏதுவான காரணிகளை அவதானித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X