Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 15 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்டத்தில், 58 ஆயிரத்து 500 ஹெக்டேயர் காணிகளில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுமென்று தாம் எதிர்பார்ப்பதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.
இதனடிப்படையில், பெரிய நீர்ப்பாசனங்களின் கீழ், 54,100 ஹெக்டேயர் காணிகளிலும் சிறிய நீர்ப்பாசனங்களின் கீழ், 4,400 ஹெக்டேயர் காணிகளிலும் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சேனநாயக்க சமுத்திரத்தில் தற்போது போதியளவு நீர் உள்ளமையினால், எதிர்பார்க்கும் அளவு காணிகளில் நெற் செய்கையினை மேற்கொள்ளவதில் எதுவித சிக்கல்களும் இல்லை எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
சேனநாயக்க சமுத்திரத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் சேமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மாவட்டத்தின் நீரேந்து பகுதிகளில் மழை பெய்து வருகின்றமையினால், சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகள், விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான காலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் தவிர்ந்த பகுதிகளிலுள்ள விவசாயிகள், ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் தமது விதைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய பகுதிகளில் விதைப்பு நடவடிக்கைகளுக்கான காலம் குறித்து, விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அம்பாறை மாவட்ட விவசாயிகள் சிறுபோக நெற்செய்கைக்காக, தமது காணிகளை பண்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
48 minute ago
2 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
03 Oct 2025