2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கி வைக்கும் வைபவம்  நிந்தவூர் அல்-ஹஸ்னாத் பாலர் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

கல்முனை வலய அஹதியா பாடசாலைகளின் நிந்தவூர் கிளைச்செயலாளர் எம்.ஐ. ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்முனை வலய அஹதியா பாடசாலைகளின் தலைவர் ஏ.ஆர்.எம். சுபையிர், அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X