2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ் - முஸ்லிம் மக்களை ஒன்றிணைக்கும் புதிய அமைப்பை உருவாக்குவது தொடர்பில் பேச்சு

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

தமிழ் பேசும் (தமிழ் - முஸ்லிம்) மக்களை ஒன்றிணைத்து, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது சம்பந்தமான கலந்துரையாடல், நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு, அக்கறைப்பற்று நேர்சிங் ஹோம் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

டாக்டர் எஸ்.எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எ.சி.பதுறுதீன், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், முஸ்லிம் மக்களின் உறவைக் கட்டியெழுப்புவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X