2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 16 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலய மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.எல்.உரைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலய பொறுப்பாசிரியர்கள், அல்-ஹிதாயா வித்தியாலய ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டி வைத்தனர்.

இங்கு அதிபர் உரையாற்றுகையில், 

பொறுப்புதாரிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமானவர்களாக செயற்பட வேண்டும். அத்தோடு, தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பாதுகாப்பதும் கடமையாகும்.

பாடசாலைக் கல்வியில் சிறந்த முன்னுதாரணமாக செயற்படும் மாணவர்களே நாளைய சமூகத்தில் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களாக மிளிர்கின்றனர்.

எனவே, தலைமைத்துவத்துக்கான ஆளுமை, நேர்மை, பொறுப்புக்கூறும் தன்மைகள் என்பனவைகளை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X