2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பல்மருத்துவ கதிரியக்க கூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 17 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கான பல்மருத்துவ கதிரியக்கக் கூடத்தை (Dental X-ray Plant) நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், திங்கட்கிழமை (16) திறந்து வைத்தார்.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் எம்.நஸீர் அஹமட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பல்மருத்துவத் துறைக்கான கதிரியக்கக் கூடம் இல்லாத குறைபாட்டினால் இப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.

இதனை அமைத்துத் தருமாறு வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விடுத்த வேண்டுதலின் பேரிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், வைத்திய அதிகாரி ஆகில் அஹமட் சரீப் மற்றும் வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X