2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மானிய உரத்துக்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான, மானிய உரம் தேவைப்படுவோர், விதைப்பு நடவடிக்கை இடம்பெறுவதற்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, தமது விண்ணப்பங்களை, கமநலசேவை நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்களுக்கு, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் - அண்மையில் அனுப்பி வைத்த சுற்று நிருபத்தினூடாக, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விதைப்புத் திகதிக்கு முன்னதாக – தமக்குத் தேவையான மானிய உரத்துக்குரிய பணத் தொகையை, காணி உரிமையாளர்கள் செலுத்தி முடிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓர் அந்தர் உரத்துக்கான மானியத் தொகையாக 350 ரூபாவும், அதனுடன் காப்புறுதித் தொகையாக 150 ரூபாவும் செலுத்த வேண்டுமென, கமநலசேவை நிலையத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதற்;கிணங்க, உச்சகட்டமாக 5 ஏக்கர் காணிகளுக்கு மானிய விலை அடிப்படையில் உரம் வழங்கப்படும்.

ஒரு ஏக்கர் நெற் செய்கைக் காணிக்கு 86 கிலோகிராம் யூரியா, 20 கிலோகிராம் ரி.எஸ்.பி, 22 கிலோகிராம் எம்.ஓ.பி எனும் அடைப்படையில் - கடந்த முறை, மானிய உரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X