Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 17 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னடுப்பது தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில், உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (17) நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபினால் முன்னடுக்கத்திட்டமிட்டிருந்த கல்முனை புதிய நகரத் திட்டத்தை அடியொற்றியதாக புதிய கல்முனை நகரத்திட்டத்தை செயற்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்த வாரம் அமைச்சர் ஹக்கிம் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார். இதற்கமைய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.
அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைவாக புதிய கல்முனை நகரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதுக்கு ஏதுவான காரணிகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகள், திணைக்கள உயர் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
46 minute ago
1 hours ago
2 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
03 Oct 2025