Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 25 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அக்கல்வியை கற்பதற்காக அவர்கள் காட்டும் அக்கறை, ஆர்வம் அதனிலும் சிறப்பானது என ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி சித்ரா தேவராஜன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று எல்சி பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இன்று பல பெண்கள் சமூகத்தின் முன்னோடிகளாகவும் சமூக நலனில் அக்கறையுடையவர்களாகவும் திகழ்கின்றனர். சுயமாக சிந்தித்து செயலாற்றும் தனித்துவம் மிக்கவர்களாகவும் மாற்றம் அடைந்துள்ளனர்.
பாடசாலை கல்வியுடன் தங்களை நிறுத்திவிடாது பல பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்வதன் ஊடாக தங்களது வாழ்வை வளப்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிட்டார்.
மேலும், எல்சி பெண்கள் கல்லூரியில் கற்பிக்கப்படும் ஆங்கில கல்வி, அழகுக்கலை பயிற்சி ,தகவல் தொழில்நுட்பவியல் நெறிகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளுகின்ற இரு சமூகங்களையும் சார்ந்த மாணவிகளுக்கும் இக்கல்லூரி ஆற்றி வரும் பணிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டார்.
நிருவாக உத்தியோகத்தர் நியோமி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்வைத்தியர் திருசாந்தி கிரிதரன், மகாசக்தி தலைவி துளசிமணி மனோகரன், எல்சி பெண்கள் கல்லூரியின் பணிப்பாளர் கே.எல்.எம்.ஜசால் முகமட், எல்.பி.ஏ கம்பஸ் பணிப்பாளர் ஏ.ஜி.எம் சாமில் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் எல்சி பெண்கள் கல்லூரியின் பணிப்பாளர் கே.எல்.எம். ஜசால் முகமட் ஆற்றிவரும் சேவையை பாராட்டி கல்லூரி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago