Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 26 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரச நியமனங்களின்போது 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக நியமனம் கிடைக்காத, 35 வயதுக்கு மேற்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பட்டதாரிகள் செவ்வாய்க்கிழமை (26) ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளனர்.
இதில், '35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளாகிய நாங்கள் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான அரச சேவையில் உள்வாங்கப்படாமல் இருப்பதையிட்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம். அரசாங்க வேலை வாய்ப்புக்கு வர்த்தமானி மூலம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதனால் எந்தவொரு அரசாங்க பதவிகளுக்கும் எங்களால் விண்ணப்பிக்க முடியாமலுள்ளது. இவ்வாறே நாங்கள் நியமனங்களிலிருந்து விடுபட்டுச் செல்கின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 'இந்நிலைமையினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 36 வயதைக் கடந்த சுமார் 50 வேலையில்லாப் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதில் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதுடன் இவர்களில் அனேகர் திருமணம் செய்யாதவர்கள்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
'எனவே, ஏதாவதொரு விசேட திட்டத்தின் கீழ் மாகாண சபை நியமனங்களுக்குள் எங்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர கிழக்கு மாகாண முதமைச்சர் ஆவன செய்ய வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 35 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளே தங்களது பட்டப்படிப்பை முடிப்பதற்கு தடையாக இருந்ததென்றும் அதனாலேயே இந்த வயது மூப்பின் அடிப்படையில் பட்டப்படிப்பை முடிக்க முடிந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
theepa Tuesday, 26 May 2015 06:50 AM
good
Reply : 0 0
jeganathan Tuesday, 26 May 2015 06:53 AM
good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago