2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Sudharshini   / 2015 மே 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை கண்டித்து திங்கட்கிழமை (25) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வேண்டுகோளுக்கமைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக மைதானத்தில் கொட்டப்பட்ட மணல் மற்றும் கற்கள் அகற்றப்படாமலும் தோண்டப்பட்ட பல குழிகள் சீர் செய்யப்படாமலும் காணப்படுகின்றன.

குறித்த மைதானத்தை சம்மந்தப்பட்ட தரப்பினர் சீர்செய்து கொடுக்காமையை  கண்டித்து இன்று அக்கரைப்பற்று மாநகர சபைக்கெதிராகவும் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவதுக்கு ஒரு சில விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த சம்மந்தப்பட்ட தரப்பினரை மாநகர சபைக்கு அழைத்து மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தார்.

இதன்போது, மைதானத்தில் காணப்படும் மணல் மற்றும் கற்களை அகற்றி அங்கு காணப்படும் குழிகளை நிரப்பி செப்பனிடுதல்.

-மைதானத்தை சுற்றி காணப்படும் தனியார் தொழில்சாலைகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு மைதானத்தக்குரிய நிலத்தை விடுவிப்புச் செய்தல்

-மைதானத்திற்கு சொந்தமான காணியில் தனியார் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இடங்களைவிட்டு வெளியேற மாநகர சபை நடவடிக்கை மேற்கொள்ளல்.
-மைதானத்தினை சுற்றி வர எல்லையினை நிர்ணயம் செய்தல்.

மேலுள்ள தீர்மானங்கள் இதன் போது எடுக்கப்பட்டன. சம்மந்தப்பட்ட கழகங்கள் இதுவிடயமாக எழுத்து மூலம் மகஜர் ஒன்றினை வழங்குமாறு ஆணையாளர் அஸ்மி கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .