Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 மே 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
மாதிரி சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கிராமங்களை உருவாக்கும் தேசியத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (26) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைய பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஐ.எல்.சமீம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுடீன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
பிரச்சினைகள் வருமுன் அதற்கான காரணிகளை இனங்கண்டு ஒருங்கிணைந்து செயற்பட்டு நிலையான தீர்வினை பெறுவதே இதன் நோக்கமாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை-15, 16 மற்றும் பாலமுனை-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் கிராம அதிகாரிகள், திவிநெகும அதிகாரிகள் மற்றும் மகளிர் சங்கங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago