2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுகாதார வாழ்வு மையம் திறப்பு

Kogilavani   / 2015 மே 26 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார வாழ்வு மையம், செவ்வாய்க்கிழமை (26) வைத்தியசாலையின் சிறுபிள்ளை விடுதி கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், தொற்றா நோய் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், தரமுகாமைத்துவ வைத்தியர் எம்.சீ.மாஹிர், கண் வைத்திய நிபுணர் எம்.ஏ.ஏ.றிசாட் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது அம்மையததுக்கு தேவையான ஒரு தொகுதி உபகரணங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.
 
இச்சுகாதார வாழ்வு மையத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குருதி அமுக்கம், நீரிழிவு, கொளஸ்றோல் மற்றும் தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனை இடம்பெறுவதுடன் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும் வழங்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் இதன்போது தெரிவித்தார்.
 
இச்சுகாதார வாழ்வு மையத்தை மக்கள் சரியாக பயன்படுத்தினால் இதன்மூலம் கூடுதலான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .