2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வித்தியாவின் மரணத்துக்கு நீதி கோரி அமைதி போராட்டம்

Princiya Dixci   / 2015 மே 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

வித்தியாவின் மரணத்துக்கு நீதி கோரி, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை உயர்தர மாணவர்கள், அமைதியான முறையில் தங்களது போராட்டத்தினையும் எதிர்ப்பையும் செவ்வாய்க்கிழமை (26) வெளியிட்டனர்.

பாடசாலை முன்றலில் இன்று 12 மணியளவில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்வேறு சுலோகங்களை தாங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எதிர்கால சிற்பிகளை சீரழிக்காதே, பெண்களுக்கெதிரான வன்முறை சட்டமூலத்தை வலுப்படுத்துங்கள், பெண்களை பெண்களாய் மதியுங்கள், காமுகர்களை சமூகத்தை விட்டு விரட்டுவோம் போன்ற சுலோகங்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களாகவே முன்வந்து ஏற்பாடு செய்த இந்த அமைதிப் போராட்டம், 20 நிமிடம் வரையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .