2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு

Thipaan   / 2015 மே 27 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நிந்தவூர் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (27)  நடைபெற்றது.

இந்நிகழ்வு, நீதியமைச்சின் மத்தியஸ்த சபை இணைப்பாளர் ஜசபால டீ சில்வா தலைமையில் இடம்பெற்றது.

இப்பயிற்சிச் செயலமர்வில் ஆர்.ஜோன் பிலிப், எம்.ஏ.அப்துல் கப்பார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு, மத்தியஸ்தம் செய்யும் திறன்கள், மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிகளை வழங்கினர்.

மத்தியஸ்தர் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பழைய, புதிய உறுப்பினர்கள் இப்பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டனர். இப்பயிற்சி நெறி எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .