2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கூரைத்தகடு உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத கூரைத்தகடுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அம்பாறை, நவகம்புரவில்  நேற்று புதன்கிழமை  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் நிலவும் மற்றும் வலுவடைந்துவரும் உறவுக்கான  உதாரணமாக இந்த புதிய தொழிற்சாலை அமைந்துள்ளது என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக தேர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க மக்களின் அர்ப்பணிப்புக்கான சிறந்த உதாரணமாக இந்த தொழிற்சாலை திகழ்கின்றது என்று  ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் அலிசன் அரியஸ் இதன்போது தெரிவித்தார்.

இத்தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காகவும் துருப்பிடிக்காத இரும்புக்கூரைகள் உருவாக்குவதற்குமான விசேட இயந்திரங்களை பொருத்துவதற்குமாக யு.எஸ்.ஏ.ஐ.டி மற்றும்  பில்டிங் சொலியூசன்ஸ் ஆகிய அமைப்புக்கள் இணைந்து  800,000 அமெரிக்க டொலரை  முதலீடு செய்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X