Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மே 28 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகரசபை பிரிவிலுள்ள தமிழ் - முஸ்லிம் கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்தசபை அமர்வு நேற்று (27) முதல்வர் சிரேஷ்ட சட்டத்திரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே அனைத்து உறுப்பினர்களின் இணக்கத்துடன் இந்த அனுமதியை வழங்குவதற்கான தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறக்கத்துல்லா, ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், எம்.சாலிதீன், மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago