2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சுற்றுலா பயணிகளின் உணவு சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தின் பொத்தவில், அறுகம்பை பகுதிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் உணவு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) அறுகம்பையில் அமைந்துள்ள உணவகங்களில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் பி.பேரம்பலம் தலைமையில் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது 16 உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது 04 உணவகங்கள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியவர்களுக்கு புதன்கிழமை (27) பொத்தவில் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது மூன்று உணவக நடத்துனர்களுக்கு தலா 6,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கான  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X