2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பிழையான வழியில் சென்றுவிட்டேன்: பியசேன

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

'மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு கடந்த காலத்தில் பிழையான வழியில் சென்று விட்டேன். அதனால் நான் துடித்துக் கொண்டிருக்கின்றேன். என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன்' என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.

தேவையற்ற சமூகததுக்கு சேவை செய்ய எத்தணித்து பாவத்தை அள்ளி தலையில் போட்டேன். இக்கர்மத்தை தொலைக்க கதிர்காமத்தில் நேர்த்தி வைக்கவுள்ளேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் வியாழக்கிழமை(28) நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பிழையை ஒரு சிலர் நன்மைக்காக செய்கின்றனர். ஆனால் பலர் பிழையை தொழிலாகவே செய்கின்றனர். ஒரு சமூகத்தில் படிக்காதவர்கள், சமூக பற்றில்லாதவர்கள், இலட்சியமில்லாதவர்களே பயங்கரவாதிகள். அவர்களை போன்று செயற்படாதீர்கள். இன்று சமூகத்துக்கு நல்லவர்கள் தேவைப்படுகின்றனர். அரச அதிபராக கடமையாற்றும் அருமைநாயகம் போன்ற உயர் தவிகளில் இருக்கும் நல்லவர்களை பெற்றது உங்கள் மண்.

ஆகவே அவரைப்போன்று உயர்பதவிகளை வகிக்க வேண்டும் என மனதில் கொள்ளுங்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X