2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நுகர்வோர் சட்டத்தை மீறிய 14 வர்த்தகர்களுக்கு அபராதம்

George   / 2015 மே 29 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

நுகர்வோர் சட்டத்தை மீறிய 14 வர்த்தகர்களுக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த வர்த்தகர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(28) ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வுப்பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையில் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தியதாகவும் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .