Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2015 மே 29 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அங்கத்துவர்களை இணைத்துகொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான ஆரம்ப நிகழ்வு கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது வாசஸ் தலத்தில் நேற்று வியாழக்கிழமை (28) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப்படிவமானது சிராஸ் மீராசாஹிபினால் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்;கப்பட்டது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்கால போராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
மேலும் இகட்சியின் அங்கத்துவத்தை பெறுகின்ற ஆண், பெண் இருபாலாரும் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்படுவர் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள பெருந்திரளான மக்கள் கூடியிருந்த இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளருமான துல்சான், மை ஹோப் நிறுவனத்தின் உரிமையாளரும் கட்சியின் முக்கியஸ்தருமான சித்தீக் நதீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago