Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மே 29 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்,எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஏ.ஜே.எம்.ஹனீபா
மன்னார், முசலி பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
சம்மாந்துறை மக்கள் சார்பிலும் சம்மாந்துறை ஓசட் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டிலும்; நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டார்கள்.
'முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரசாரங்களை நிறுத்து', 'மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்காதே', 'அரசே வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அநீதி இழைக்காதே', 'வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள இனவாத சக்திகளையும் போலிப் பிரசாரங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்' போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட பேரணி இறுதியில் சம்மாந்துறை மக்கள் சார்பில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் சார்பில் கலந்து கொண்ட கணக்காளர் எம்.மஹ்ருபிடம் சம்மாந்துறை ஓசட் சமூக நல அமைப்பின் தலைவர் ஏ.சீ.சஹீல் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தார்.
இதேவேளை, வில்பத்து பிரதேசத்தில் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இனவாதத்துடன் நோக்குபவர்களுக்கு எதிராக சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அமைதி பேரணி இடம்பெற்றது.
பேரணியில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு , கல்முனைக்குடி , மருதமுனை, இறக்காமம், நிந்தாவூர், ஒலுவில் , நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களைச்; சேரந்தவர்கள் கலந்து கொண்டனர்.
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago