2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சாவியர் மகளிர் வித்தியாலய மூன்று மாடிக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன் 

காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலயத்துக்கு மூன்று மாடிக்கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அபிவிருத்தித் தேவைகள் குறித்து, பாடசாலை நிர்வாகம் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைவாக மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

ஆரம்ப கட்ட நிதியாக நிர்மாண வேலைகளுக்கென 2.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி, அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X