2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (30) நடைபெறவுள்ளது.

அம்பாறை தயாகமககே ஆடைத்தொழிற்சாலை மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி  அமைச்சர் சஜித்பிரேமதாச கலந்து கொண்டு, அம்பாறை மாவட்டத்தின் திவிநெகும பயனாளிகள் அல்லாத குறைந்த வருமானம் பெறுகின்ற 515 பயனாளிகளுக்கான  கடன்களை வழங்கி வைப்பார்.

இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன அமைச்சர் அனோமா கமகே, ஐக்கிய தேசியக்  கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தயாகமகே உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் அனோமா கமகேயின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் இணைப்பாளர் வினோகாந் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X