2025 ஜூலை 02, புதன்கிழமை

அல் அக்ஸா மகளிர் சனசமூக நிலைய கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஒலுவில், அல் அக்ஸா மகளிர் சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்குமிடையிலான கலந்துரையாடல், ஒலுவில் 7ஆம் பிரிவு சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று செவ்வாய்கிழமை (02) இடம்பெற்றது. 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அக் அக்ஸா மகளிர் சனசமூக நிலையத்தின் தலைவி எம்.எச்.றபீதா பல கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரிடம் முன்வைத்தார்.

இக்கோரிக்கைகளில் சிலவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏற்றுக்கொண்டார்.

அதில், மகளிர் சனசமூக நிலையத்தில் அங்கத்துவம் வகிக்கின்றவர்களில் வீடு இல்லாத மிக வறிய குடும்பத்துக்கு வீடு ஒன்றை பெற்றுத்தருவதாகவும் கணவனை இழந்து வாழ்வோருக்கும், வறிய குடும்பங்களுக்கும், வீட்டு கைத்தொழில் செய்வோர்களுக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை ஆலங்குளம் பொது நூலகத்தின்  உதவி நூலகர் ஏ.பி.அன்வர் மகளிர் சனசமூக நிலையத்தின் செயலாளர் ஆர்.றபீனியா, பொருளாளர் எஸ்.ரீ.நாகூர் உம்மா உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .