2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போசாக்கு மதிப்பீடு தொடர்பான வேலைத்திட்டம்

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத்தில் பிள்ளைகளின் போசாக்கு மதிப்பீடு தொடர்பான வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.

தேசிய உணவு போசாக்கு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்;.கணேஸ்வரன் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது 01 தொடக்கம் 05 வயது வரையான பிள்ளைகளின் நிறை, உயரம், போசாக்கு, உடல்நிறை திணிவு என்பன அளவிடப்பட்டது.

அத்துடன், சிறுவர்களின் போசாக்கு தொடர்பான வைத்திய ஆலோசனைகளும் போசாக்கு உணவுகளும் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .