Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 07 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையின் ஏற்பாட்டில் பாலமுனை திராய்க்கேணி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், திராய்க்கேணி தமிழ் வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.
திராய்க்கேணி கிராமத்தில் வீடு இல்லாமல் தற்காலிக இடங்களில் வாழும் மக்களுக்கு காணி வழங்கி நிரந்தரமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுதல், இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான மயான இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாதிருக்கும் ஆலயங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
திராய்க்கேணி கிராமத்தில் காணப்படும் அரச காணிகள் மற்றும் பொது இடங்களை பார்வையிட்டு குறித்த காணிகளில் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இக்கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தருவதாக இதன் போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கிராமத்தின் குறைபாடுகள் அடங்கிய மகஜரும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
திராய்க்கேணி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவர் ஜே.யோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்னவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜே.ஜயந்திரன், மாவட்ட மீனவர் பேரவையின் இணைப்பாளர்களான கே.இஸ்ஸதீன், எஸ்.மகேந்திரன், கிழக்கிலங்கை இந்து சமய விழிப்புணர்வு பேரவையின் பணிப்பாளர் தரு ரவிஜி குருக்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.சுந்தரம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
6 minute ago
15 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
33 minute ago