Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 08 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சர்வதேச சிறுவர் தொழிலாளருக்கு எதிரான தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட மூவீன சிறுவர்கள் கலந்து கொள்ளும் சிறுவர் ஊடக மாநாடு, காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் புதன்கிழமை (10) 2.00 பிற்பகல் மணிக்கு நடைபெறவுள்ளதாக கல்முனை பிராந்திய மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தெரிவித்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு, 'தற்காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மூவின சிறுவர்களும் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு அறியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் சீ.சிறிகாந் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் அம்பாறை மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஒய்வு பெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர் ஏ.உதுமாலெவ்வை, கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் தம்மிக்கா குலத்துங்க, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக எம்.ஐ.றியாழ் தெரிவித்தார்.
13 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago