2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

குழாய் பொருத்துநர்களுக்கு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 08 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

நிலையானதொரு நீர்வழங்கல் முறைமையை  உருவாக்குவதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இலங்கையில் குழாய் பொருத்துநர் தொழிற்றுறையை நிறுவுவதற்காக நாடளாவிய ரீதியில் குழாய் பொருத்துநர்களுக்கான விசேட பயிற்சிப்பட்டறைகள் நடைபெறுகின்றன.

இதன் ஒரு கட்டமாக  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த  என்.வி.கியூ. தராதரமுள்ள குழாய் பொருத்துநர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நாளைமறுதினம் புதன்கிழமை (10) அம்பாறை நகர மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து என்.வி.கியூ. தராதரமுள்ள குழாய் பொருத்துநர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X