Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சாய்ந்தமருது தோணா இரண்டாம் கட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் பொருட்டு குழுவினர் நேற்று (07) சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து அபிவிருத்திப்பணிகளை பார்வையிட்டனர்.
தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எம்.ஜெமில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதற்கென அமைச்சர் றவூப் ஹகீமினால் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவிக்கையில், 'தோணா அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், தோணாவை சுத்தமாக பேணுவது தொடர்பில் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோணாவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
12 minute ago
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
39 minute ago