Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 09 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
மிளகுகளை திருடி விற்பனை செய்த இருவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் நேற்று உத்தரவிட்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வியாபாரி ஒருவர் மிளகை காய வைக்கும் பொருட்டு அக்கரைபற்றில் உள்ள இரு அரிசி ஆலைகளின் சீமேந்து தரைகளை வாடகைக்கு பெற்று அதில் பணியாட்களை மிளகு காய வைக்கும் பணியில் அமர்த்தியிருந்தார்.
கடந்தவாரம், மேற்படி வியாhபாரி தன் வாடிக்கையாளரில் ஒருவரான அப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த கடைக்காரரிடம் மிளகு கொள்வனவு தொடர்பில் கேட்டபோது தங்களிடம் போதியளவு மிளகு உள்ளதாகவும் தாங்கள் பிரிதொரு வியாபாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் வியாபாரி கடைக்காரரிடம் விசாரித்த போது, தன்னிடம் பணியாற்றியவர்கள் மிளகை திருடி கடைக்காரரிடம் விற்பனை செய்துள்ளதாக அறிந்துகொண்டார். பின்னர், இவ்விடயம் தொடர்பில், அப்புத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் அவர்களது செந்த ஊரான அப்புத்தளை ஹல்துமுல்லையில் வைத்து கைதுசெயததுடன் அப்புத்தளை பொலிஸினூடாக அக்கறைப்பற்று பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்களிடமிருந்து 20 மிளகு மூடைகளும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
18 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
36 minute ago