Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஆற்றலும் அனுபவமும் கொண்டுள்ள ஒருவரே உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் இன்று (09) செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பது முஸ்லிம்களின் கல்வி, கலாசார, அரசியல், சமூக, பொருளாதார எழுச்சியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலாசாலையாகும்.
அந்த வகையில் இப்பல்கலைக்கழகத்துக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஒருவரையே நியமிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்காகவே இவ்விடயத்தை அரசாங்க உயர்மட்டத்தினரின் கவனத்துக்;கு கொண்டு சென்றுள்ளேன்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பவருக்கு சிறந்த பண்புகளும் தகுதிகளும் இருப்பது அவசியமாகும். அந்தவகையில் இப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி ஏ.எம்.றஸ்மி ஆகிய இருவருள் ஒருவரை புதிய உபவேந்தராக நியமனம் செய்யுமாறு அரசாங்க உயர்மட்டத்தினரை கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
12 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago