2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டுப்பிரசுர விநியோகமும்

Princiya Dixci   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவும் உலக தரிசன நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டுப்பிரசுர விநியோகமும் நாளை வியாழக்கிழமை (11) மத்தியமுகாம் நகரில் நடைபெறவுள்ளது.

இதில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், உலக தரிசன நிறுவனத்தின் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் றொபின்சன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.கஸ்பியா வீவி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெனிதா பிரதீபன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஜே.மயூரன், உளவளத்துணை உதவியாளர் ரி.தயாளினி மற்றும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.வினோதினி என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X