2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று -அம்பாறை வீதி 6ஆம் கட்டைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில்  ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்றபோது, சட்டவிரோதமாக உழவுஇயந்திரத்தில் மணல் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து உழவுஇயந்திரத்தை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X