2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மைதானக்காணிக்காக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலத்துக்கு சொந்தமான மைதானக் காணியை  மீட்டுத்தருமாறு கோரி அவ்வித்தியாலத்துக்கு முன்பாக மாணவர்களும் பெற்றோரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  நேற்று  வியாழக்கிழமை (11) ஈடுபட்டனர்.

இக்காணியை தனி நபர்களும் சில கழகங்களும் ஆக்கிரமித்துள்ளன.

பெரிய நீலாவணை பிரதேசத்திலுள்ள ஒரேயொரு  மைதானம் இதுவே. விளையாட்டுத்துறையில் திறமைi காட்டக்கூடிய எங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இம்மைதானத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீட்டுத்தரவேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

இதன்போது, பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்கான மகஜரை கல்முனை பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X